வழக்கம் போல இந்தியா தடுமாற்றம்.. பட்லர் அதிரடியில் 332 ரன்கள் குவித்த இங்கிலாந்து..!!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 198 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. ஜோஸ் பட்லர், அதில் ரஷித் களத்தில் இருந்தனர். இங்கிலாந்தை இந்தியா 250 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்யுமா? என்ற எதிர்பார்ப்போடு ஆட்டம் தொடங்கியது. 9வது விக்கெட்டுக்கு கூட்டணி இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் விரைவாக ரன் குவிப்பதில் வல்லவர் என்பதால் அவரை ஆட்டமிழக்கச் செய்தால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்ற சூழ்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்களால் அவரை அசைக்க முடியவில்லை.

அதில் ரஷித் 15 ரன்களுக்கு பும்ரா பந்தில் வெளியேறினார். அடுத்து, ஒன்பதாவது விக்கெட்டுக்கு வந்த ஸ்டுவர்ட் பிராடு மற்றும் பட்லர் இணைந்து அணியின் ரன்களை உயர்த்தினர். 98 ரன்கள் கூட்டணி அவர்கள் இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து 198 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற தடுமாற்றமான நிலையில் இருந்து, 300க்கும் மேலே சென்றது.

இந்த நிலையில் ஜடேஜா பிராடை 38 ரன்களுக்கு வெளியேற்ற, அடுத்த சில ஓவர்களில், 89 ரன்கள் சேர்த்த பட்லரும் வெளியேறினார். இங்கிலாந்து 332 ரன்கள் எடுத்து தன் முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. மீண்டும் தவான் சறுக்கல் அடுத்து, இந்தியா ஆட்டத்தை துவங்கிய சில நிமிடங்களில் தவான் வழக்கம் போல விரைவாக ஆட்டமிழந்தார். 3 ரன்களுக்கு அவர் வெளியேற, புஜாரா, ராகுல் இணைந்து 64 ரன்கள் கூட்டணியாக ரன் எடுத்தனர். இருவரும் 37 ரன்கள் அடித்து வெளியேறினர்.

தடுமாறும் இந்திய பேட்டிங் அடுத்து கோலி மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 49 ரன்கள் அடித்தார். ரஹானே 0, ரிஷப் பண்ட் 5 என வெளியேற, இறுதியில் புதிய வீரர் ஹனுமா விஹாரி 25 ரன்கள் அடித்தும், ஜடேஜா 8 ரன்கள் அடித்தும் ஆடி வருகின்றனர். இந்தியா 174 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தவித்து வருகிறது. தற்போது இந்தியா 158 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஹனுமா விஹாரி இந்திய அணியை காப்பற்றுவரா, ஜடேஜா தான் சிறந்த ஆல் ரவுண்டர் என நிரூபிப்பாரா? என்ற கேள்விகளோடு மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.

Comments (0)
Add Comment