கோலி செய்த ரிவ்யூ சொதப்பல்… ஆயிரம் இருந்தாலும் தோனியை இதுல அடிச்சுக்க முடியாது..!!

விராட் கோலி ஐந்தாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று இங்கிலாந்து பேட்டிங்கின் போது இரண்டு முறை ரிவ்யூ கேட்டார். இரண்டுமே அவுட் இல்லை என தெரிந்தததால் அந்த வாய்ப்புகள் வீணானது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 5வது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றன. இந்தியா தொடரை இழந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வென்று ஆறுதல் அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஆடி வருகிறது. இந்திய அணி, இரண்டு நாள் முடிவில் இதுவரை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி செயல்படவில்லை.

இந்த நிலையில் முதல் நாள் கோலி ரிவ்யூவை வீணாக்கியது குறித்த பேச்சு கிளம்பியுள்ளது. முந்தைய கேப்டன் தோனி ரிவ்யூ கேட்பதில் கில்லாடி என்பதால் கோலிக்கு இந்த விஷயத்தில் மேலும் அழுத்தம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து நல்ல துவக்கம் இங்கிலாந்து துவக்க இணை 60 ரன்கள் குவித்த பின், ஜென்னிங்க்ஸ் ஆட்டமிழந்தார். அதன் பின் மொயீன் அலி மூன்றாவதாக வந்து ஆடினார்.

இங்கிலாந்து 70 ரன்கள் இருந்த போது, பும்ரா வீசிய பந்து மொயீன் அலி முட்டிக்கு சற்று மேலே அவரது பேடில் பட்டது. இதற்கு LBW அவுட் கேட்டார் பும்ரா. அம்பயர் மறுத்துவிட்டார். மொயீன் அலிக்கு கேட்ட ரிவ்யூ இது சிறந்த முடிவு என கமண்டரியில் கூறி கொண்டே இருந்த போது கோலி ரிவ்யூ கேட்டு விட்டார். முட்டிக்கு மேலே பட்ட பந்துக்கு ஏன் அவுட் கேட்டு ரிவ்யூ போகிறார்கள் என கேள்வி எழுந்தது. நினைத்தது போல, அந்த பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது. அதனால், அவுட் இல்லை. முதல் ரிவ்யூ வீணானது. மீண்டும் அதே தவறு அடுத்து அரைசதம் அடித்து ஆடி வந்த அலஸ்டர் குக், இஷாந்த் வீசிய பந்தில் தடுமாற, பந்து அவர் காலில் தெளிவாக பட்டது. இதற்கும் LBW அவுட் கேட்டது இந்தியா. இப்போதும், முன்பு போல பந்து குக்கின் முட்டிக்கு மேலே பட்டது. அதிலும் அலஸ்டர் குக் காலை சற்று உயர்த்தி வைத்திருந்தார்.

அப்போது முட்டிக்கு மேலே பட்டது பந்து. இந்த ரிவ்யூவிலும் அவுட் இல்லை என தெரிந்ததால், இந்தியா இரண்டு ரிவ்யூவையும் இழந்தது. அடுத்து பல முறை அம்பயர் அவுட் கொடுக்க மறுத்த போது, ரிவ்யூ இல்லாமல் இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாமர்த்தியம் வேண்டும் கோலி பல சமயம் எல்லா விஷயத்தையும் தன் மீதே போட்டுக் கொள்கிறார். LBW ரிவ்யூ என்று வரும்போது விக்கெட் கீப்பரிடம் கேட்பது முக்கியம். அவர் தான் பேட்ஸ்மேன் பார்வையில் ஸ்டம்ப் பின்னே இருந்து நேர் கோட்டில், பந்தின் திசையை பார்க்க முடியும். அதே போல, கேப்டனாக இருந்தாலும் மற்ற அனுபவ வீரர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம். கோலி பல முறை உணர்ச்சிவசப்பட்டு ரிவ்யூ கேட்டு வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்.

தோனி ரிவ்யூவில் கில்லாடி தோனி இந்த விஷயத்தில் கில்லாடி தான். அவர் விக்கெட் கீப்பிங்கில் கூடுதல் அனுபவம் இருப்பதை வைத்து, ரிவ்யூ விஷயத்தில் அதிக முறை வென்று இருக்கிறார். மற்ற வீரர்களோடு விரைவாக பேசி முடிவெடுப்பதோடு, குறிப்பாக ஆட்டத்தின் எந்த கட்டத்தில் நாம் ரிவ்யூவை பயன்படுத்த வேண்டும் என்பதிலும் தெளிவாக இருப்பார். தோல்விகள் இல்லாத வரை கோலி நிம்மதியாக இருக்கலாம். தோல்விகள் வந்தால், இப்படி ஒவ்வொரு விஷயமும் அவருக்கு அழுத்தமாகவே முடியும்.

Comments (0)
Add Comment