பெட்ரோல் போட தயங்கி நின்ற பெண்ணுக்கு பொலிசார் செய்த செயல்: தொடர்ந்து நடந்த சம்பவங்கள்..!!

அமெரிக்காவின் Michigan பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு வந்த Delores Marotta (75) தயங்கியவாறு தனது காருக்கு 3 டொலர்களுக்கு பெட்ரோல் நிரப்பச் சொன்னார்.

அப்போது அங்கு வந்த பொலிஸ் அதிகாரியான Todd Bing, Delores கையில் சில கசங்கிய டொலர் நோட்டுகள் மட்டுமே இருப்பதைக் கண்டார்.அவரை காருக்குள் அமரச் சொன்ன Bing, அவரிடம் பேச்சுக் கொடுத்தவாறே பெட்ரோல் நிரப்ப ஆரம்பித்தார்

அவரிடம் தனது கணவர் இறந்து போனதையும் மளிகைப் பொருட்கள் வாங்கவும் தனது மகள் இலவசமாக கொடுத்த காருக்கு பெட்ரோல் நிரப்பக் கூட தான் கஷ்டப்படுவதையும் குறித்து பேசிக் கொண்டிருந்தார் Delores.

பேசிக்கொண்டே பெட்ரோல் போடுவதைக் கவனித்த Delores, 3 டொலர்களுக்கும் அதிகமாக பெட்ரோல் நிரப்பப்படுவதைக் கண்டார்.

பின்னர்தான் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்கான செலவை Bing ஏற்றுக் கொண்டதை அறிந்துகொண்டார் Delores.

இதற்கிடையில் பெட்ரோல் நிலைய உரிமையாளரான Seth Kasyouhanan, இந்த சம்பவத்தை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்

அவர் நடந்த சம்பவத்தை படத்துடன் முகநூலில் வெளியிட, வைரலானது இந்த செய்தி. 21,000 முறைக்கும் அதிகமாக பகிரப்பட்டது அந்த செய்தி.

Deloresக்கு உதவுவதற்காக குறைந்தது 5,000 டொலர்களாவது சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் GoFundMe கணக்கு ஒன்று துவக்கினார் Kasyouhanan.

ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் ஆயிரக்கணக்கான டொலர்கள் குவிந்துவிட்டன. தனது வாழ்வில் ஒளி ஏற்றியவராக Bingஐப் பார்க்கும் Delores, கடவுள்தான் அவரை அனுப்பியதாக நம்புகிறார்.

இதற்கிடையில் திடீரென கிடைத்த புகழால் வெட்கப்படும் Bing, இந்த சம்பவத்தால் பொலிசார் சமுதாயத்திற்கு செய்யும் நற்செயல்கள் வெளிப்பட்டதற்காக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று எளிமையாகக் கூறுகிறார் அவர்

Comments (0)
Add Comment