கடைசி போட்டினா இப்படித்தான் இருக்கணும். அலிஸ்டர் குக்கின் அசத்தல் சாதனைகள்..!!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிதொடருடன் ஓய்வு பெறுவதாக அலிஸ்டர் குக் ஏற்கனவே அறிவித்து விட்டதால் இந்த போட்டி அவரது கடைசி போட்டியாக அமைந்தது. சிறப்பாக விளையாடிய குக், இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அரைசதமும், இரண்டாவது இன்னிங்சில் சதமும் அடித்துள்ளார். இது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாகும்.

நேற்றைய போட்டியில் அவர் படைத்த சாதனைகள்
1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த ஐந்தாவது வீரர் (12742 ரன்கள்)
2. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த முதல் இடது கை பேட்ஸ்மேன் (12472 ரன்கள்)
3. டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பத்தாவது இடம் (மொத்தம் 33 சதங்கள்)
4. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் மற்றும் கடைசி போட்டிகளில் சதம் அடித்த ஐந்தாவது வீரர்.
5. டெஸ்ட் போட்டிகளில் முதல் மற்றும் கடைசி போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் மற்றும் சதம் அடித்த ஒரே வீரர்.
6. டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் சேர்த்து நான்கு இன்னிங்க்ஸ் ஆட்டம் இருக்கும்.

அதில் மூன்றாவது இன்னிங்சில் மட்டும் அதிக சதங்களை அடித்த வீரர் (13 சதங்கள்)என்ற சாதனையை செய்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சங்கக்காரா(12 சதங்கள்) 7. கடைசி போட்டியில் அதிகபட்ச ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் வரிசையில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். அவர் ரூட் உடன் இணைந்து 259 ரன்களை குவித்துள்ளார். குக்கின் ஓய்வை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 10000 ரன்களை கடந்துள்ள அனைத்து வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment