காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு..!!

திம்புலாகலை, இகலஎல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 05.300 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இன்று அதிகாலை வீட்டுக்கு அருகில் இருந்த ஓடைக்கு சென்ற போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பிரதேசத்தைச் ​சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது அரலகங்வில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments (0)
Add Comment