தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ போலீஸ் காவலில் கொலை : செப். 12, 1977..!!

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கிங் வில்லியம்ஸ் நகரில் 1946-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிறந்தவர் ஸ்டீவன் பாண்டு பைக்கோ. நடுத்தர குடும்பத்தில் 4-வது பிள்ளையாக பிறந்த பைக்கோ, தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து வந்த பைக்கோ, மாணவர் தலைவராக இருந்தபோது கறுப்பின விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து நிறவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அவருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், 1977ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் பைக்கோ கைது செய்யப்பட்டார். அவரிடம் போர்ட் எலிசபெத் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு நாள் முழுவதும் கடுமையாக அடித்து உதைத்து சித்ரவதை செய்து விசாரணை நடத்தியதால், தலையில் பலத்த காயம் அடைந்து கோமா நிலைக்குச் சென்றார் பைக்கோ.

பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து, செப்டம்பர் 11-ம் தேதி அவரை பிரிட்டோரியா சிறைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மறுநாள் (12-ம் தேதி) அவர் இறந்தார். அவர் உண்ணாவிரதம் இருந்ததால் இறந்ததாக காவல்துறை கூறினாலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

ஆனால், நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததால் பைக்கோ கொலை வழக்கில், கோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது குடும்பத்திற்கு வெறும் இழப்பீடு மட்டுமே கிடைத்தது.

Comments (0)
Add Comment