பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்துக்குட்பட்ட நகினா சாலையில் மோஹித் பெட்ரோ கெமிக்கல் பேக்டரி என்னும் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு கொதிகலன் (பாய்லர்) கடந்த 5 நாட்களாக இயங்கவில்லை.

இன்று பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, ஒரு பகுதியை வெல்டிங் செய்தபோது எதிர்பாராதவிதமாக அந்த கொதிகலன் தீப்பிழம்பாக மாறி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் காயமடைந்த 6 பணியாளர்கள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பற்றிய செய்தி வெளியானதும் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment