யாழில் அடையாளம் காணப்பட்ட மண்டையோடு..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை தொடருந்து நிலையத்து அருகில் இன்று காலை அடையாளம் காணப்பட்ட மண்டையோடு தொடர்பில், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று தற்போது பார்வையிட்டு வருகிறார்.

தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஊழியர்கள் தங்குமிடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் மனித எலும்புக்கூடு ஒன்று இருப்பதாக காங்கேசந்துறை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிவானின் வருகைக்காக காத்திருந்தனர். தற்போது நீதிவான் பொலிஸாரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

Comments (0)
Add Comment