வடமாகாண ஆளுநருடன் சிறப்பாக நடைபெற்ற, லண்டன் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பு..! (படங்கள்)

வடமாகாண ஆளுநருடன் சிறப்பாக நடைபெற்ற, லண்டன் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பு..! (படங்கள்)

வட மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வாதார, பொருளாதாரத்தை வளப்படுத்தும் முகமாக, “விவசாயம், மீன்பிடி, இறால் பண்ணை, விடுதி, வர்த்தக நிலையங்கள் அமைத்தல், கைத்தொழில்” போன்றவற்றை வட மாகாணத்தில் ஏற்படுத்தி, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இதற்கென முதலீடு செய்ய விரும்புபவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்துவதுக்காக, ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யும்…

வட மாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் குரே, வடமாகாண ஆளுநரின் செயலாளரான திரு.இலட்சுமணன் இளங்கோ, மற்றும் வடமாகாண ஆளுநரின் அதிகாரிகள் குழுவுடனான, பொதுமக்களின் சந்திப்பு நேற்றையதினம் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பல முதலீட்டார்களான வர்த்தகப் பெருமக்களுடனான தனிப்பட்ட சந்திப்பும் நேற்றுமுன்தினம் லண்டனில் நடைபெற்றது. அதேபோல் இன்றும் பொது சந்திப்பு நடைபெற உள்ளது.

வடமாகாண தமிழ் மக்களின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட அதிகாரிகள் லண்டன் சென்றடைந்துள்ளனர் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அழைப்பின் பேரில் கடந்த நான்காம் திகதி லண்டன் சென்ற ஆளுநர் புலம்பெயர்வாழ் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார் நேற்றைய தினம் மேற்கு லண்டனில் அமைந்துள்ள மண்டபத்தில் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் முதலீட்டாளர்கள் என பலதரப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரிடம் நேரடியாக பல கேள்விக்கணைகளைத் தொடுத்தனர் வட மாகாண சபையின் செயற்பாடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தும் காணிகள் விடுவிப்பு யாழ்குடா நாட்டில் அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இங்கு உரையாற்றிய ஆளுநர் “உங்கள் மக்களுக்கு, உங்கள் கிராமத்திற்கு, உங்கள் ஊருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.. புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் உங்கள் கிராமங்களில் ஒரு சிறிய தொழிற்சாலைகள் ஏதேனும் உருவாக்கி இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள் துன்பப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு டொலர் வீதமாவது பங்களிப்பு செய்யுங்கள்..

நான் வடமாகாணத்தில் தேர்தலில் போட்டியிட போவதில்லை ஆனால் இடதுசாரி கொள்கையுடன் எனது பயணம் ஆரம்பமாகியது அதனால் மக்களுக்கு எனது காலத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று இருக்கின்றேன் அதற்கு அரசாங்கத்தால் மட்டும் முடியாது உங்களைப் போன்று புலம்பெயர் மக்களின் ஆலோசனையும் உதவியும் தேவையாக இருக்கின்றது அதற்காகவே இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்னால் முடிந்த அனைத்தையும் உங்களுக்கு செய்யத் தயாராக இருக்கின்றேன் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்னைப் பயன்படுத்தி உங்கள் மக்களுக்கு, எனது சகோதர மக்களுக்கு நீங்களே நேரடியாக சென்று உதவி செய்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்கின்றேன். அதற்காக எனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் உங்களுக்கு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்” என்று தெரிவித்தார்

இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை மாலை சுவிஸ் வாழ் வர்த்தகர்கள் உட்பட, பொதுமக்களுடனான சந்திப்புக்கு “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” ஏற்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” வெளியிட்டுள்ள பிரசுரத்தில்,…

எதிர்வரும் 11.10.2018 அன்று வியாழக்கிழமை மாலை 05.30 க்கு (17.30) பேர்ண் மாநிலத்தில் Bümpliz str – 21, 3027 BERN எனும் முகவரியில் ஏற்பாடு செய்து உள்ளோம் எனவும்,

இச்சந்திப்பில் சுவிஸ் வாழ் வர்த்தக பெருமக்கள் உட்பட அனைத்து பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன்,..
“அரசியலை தவிர்த்து” மக்களுக்கு சேவையாற்ற முன்வரும் அனைத்து வடகிழக்கு மக்களையும் அன்புடன் அழைக்கிறோம்,

இடம்:- பேர்ண் மாநிலத்தில் Bümpliz str – 21, 3027 BERN
காலம் & நேரம்:- 11.10.2018 வியாழக்கிழமை மாலை 05.30 க்கு (17.30)

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்….
077.9485214, 079.9373289

“மக்களின் வாழ்வை வளப்படுத்த ஒன்றுபடுவோம்,
ஒன்றுபட்டு மக்களின் வாழ்வை வளப்படுத்துவோம்”

எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

(படங்கள்… வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு.)

Comments (0)
Add Comment