பந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..!!

சாம் பலார்ட் என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு வீரர் ஆவார்.2010 ஆம் ஆண்டில் இவர் பந்தயம் ஒன்றின்போது தோட்டங்களில் இருக்கும் இரத்தம் உறுஞ்சும் அட்டையை விழுங்கியுள்ளார்.

அப்போது பந்தயத்தில் அவர் வெற்றிபெற்றிருந்த போதிலும் 8 வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் தோல்வியை தழுவியுள்ளார். அதாவது அவர் இறக்க நேரிட்டுள்ளது.

இருபது வயதை எட்டிய நண்பர்களுடன் அமர்ந்து ரெட் வைன் மற்றும் அல்ஹகோல்களை உட்கொள்ளும்போது மேசையின் மீது சென்ற அட்டையை உண்பதற்கு சகபாடிகள் விடுத்த பந்தயத்தை ஏற்றமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை குறித்த இளைஞனின் தாயான கேட்ரி பலார்ட் 7 நியூஸ் சிட்னிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்

Comments (0)
Add Comment