வர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் 73 கைத்தொலைபேசிகளுடன் வீரகெட்டிய, ஹகுருவல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபர் ஜாஎல, பேருவளை, கிரிபத்கொட, கந்தானை மற்றும் கலேவலை ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 08 தொலைக்காட்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.

29 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக வலஸ்முல்ல மற்றும் எம்பிலிபிட்டிய நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment