புங்குடுதீவு ஶ்ரீசுப்ரமணிய மகளீர் வித்தியாலய “இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு” 2019க்கான நிகழ்வு..! (படங்கள்)

புங்குடுதீவு ஶ்ரீசுப்ரமணிய மகளீர் வித்தியாலய “இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு” 2019க்கான நிகழ்வு..! (படங்கள்)

யா/புங்குடுதீவு ஶ்ரீசுப்ரமணிய மகளீர் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2019க்கான நிகழ்வுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு பாடசாலை முதல்வர் திருமதி வ.அருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக திருமதி சா.கிருஸ்ணதாஸ் (கல்விப்பணிப்பாளர் வேலணைக் கோட்டம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு பொ.சகிலன் (உதவி உடற்கல்விப் பணிப்பாளர் தீவக வலையம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு வ.அபராஜ் (சுகாதார பரிசோதகர் புங்குடுதீவு வேலணை) திரு க.நாவலன் (பிரதேச சபை உறுப்பினர் வேலணை) திரு ச.கோகிலன் (கிராம அலுவலர் புங்குடுதீவு) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மைதான வசதிகளேதும் இல்லாத நிலையிலும் மாணவர்கள் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தவிர பெற்றோரும் பழையமாணவர்களும் திறனாய்வு நிகழ்வுகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி”க்காக ஒளிப்படம் மற்றும் தகவல் ✍யாழ் அகரன்.

Comments (0)
Add Comment