புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்..! (படங்கள்)

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்..! (படங்கள்)

யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2019க்கான நிகழ்வுகள் இன்று நண்பகல் 10மணிக்கு பாடசாலை முதல்வர் திருமதி சி.இராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது பிரதம விருந்தினராக திருமதி சா.கிருஸ்ணதாஸ் (கல்விப் பணிப்பாளர் வேலணைக் கோட்டம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு அ.சண்முகநாதன் (சமூக ஆர்வலர்) திருமதி யசோதா குமார் (பிரதேச சபை உறுப்பினர் வேலணை) திரு பி.சதீஸ் (தலைவர் புங்குடுதீவு உலகமையம்) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக திரு வ.அபராஜ் (சுகாதார பரிசோதகர் புங்குடுதீவு வேலணை), தாயகம் சமூக சேவை அமைப்பின் தலைவி திருமதி த சுலோசனா அவர்களும், திரு ம.சசிகாந்த் (கிராம அலுவலர் j/23 புங்குடுதீவு) திரு டினேஸ்குமார் (உரிமையாளர் யாழ்போன்சொப்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்கள் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது தவிர பெற்றோரும் பழைய மாணவர்களும் திறனாய்வு நிகழ்வுகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபை, “இசையும், அசைவும்” நிகழ்வு மாணவர்களுக்கான வண்ண உடைகளுக்கான (P:T.உடை) சிறியதொரு நிதி உதவியை வழங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி”க்காக ஒளிப்படம் மற்றும் தகவல் ✍யாழ் அகரன்.

 

Comments (0)
Add Comment