புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2019க்கான நிகழ்வு..! (படங்கள்)

புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2019க்கான நிகழ்வு..! (படங்கள்)

யா/புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2019க்கான நிகழ்வுகள் இன்று நண்பகல் 01மணிக்கு பாடசாலை முதல்வர் திரு சி.கமலவேந்தன் தலைமையில் நடைபெற்றது. .

பிரதம விருந்தினராக திரு சி.சத்தியசீலன் (செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சி.முருகானந்தவேல் (மனவளக்கலைப் பேராசிரியர், அறிவுத் திருக்கோயில் யாழ்ப்பாணம்) பேராசிரியர் கா.குகபாலன் (ஓய்வுநிலைப் பேராசிரியர் யாழ் பல்கலைக் கழகம்) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வித்தியாலய முந்நாள் அதிபர்களான திரு சு.கு.சண்முகலிங்கம்J/P, திரு நா.நாகராசா ஆகியோருடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்கள் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தவிர பெற்றோரும் பழைய மாணவர்களும் திறனாய்வு நிகழ்வுகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கி இல்ல அலங்கரிப்புக்களை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி”க்காக ஒளிப்படம் மற்றும் தகவல் ✍யாழ் அகரன்.

 

Comments (0)
Add Comment