இறுப்பிட்டி சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின், சுற்றுப்பகுதியில் சிரமதானம் மூலம் துப்பரவு நிகழ்வு..! (படங்கள்)

இறுப்பிட்டி சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின், சுற்றுப்பகுதியில் சிரமதானம் மூலம் துப்பரவு நிகழ்வு..! (படங்கள்)

புங்குடுதீவு இறுப்பிட்டி சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின் மைதானம், சுற்றுப்புறவீதி, பாடசாலையின் உள்ளக காணி என்பன பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் தனிப்பட்ட நிதியுதவியின் மூலம் சிரமதானப்பணியூடாக சீரமைக்கப்பட்டன .

நீண்ட காலமாகவே பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பிறிதொரு இடத்திலேயே நடைபெற்று வந்தன . பாடசாலைக்கு அருகிலுள்ள காணியின் உரிமையாளர் அக்காணியை பாடசாலைக்கு மைதானம் அமைக்கும் நோக்கில் நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை அக்காணியிலேயே நடாத்தும் நோக்கில் மேற்படி காணியை சுத்தம் செய்து தருமாறு பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனை பாடசாலை நிர்வாகத்தினர் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி இம்மைதானத்தில் சேர் துரைச்சுவாமி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தகவல் & படங்கள்… திரு.குணாளன் கருணாகரன்.

Comments (0)
Add Comment