புங்குடுதீவில் கற்றாழைகளைப் பிடுங்கியவர்கள், இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு..! (படங்கள்)

புங்குடுதீவில் கற்றாழைகளைப் பிடுங்கியவர்கள், இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு..! (படங்கள்)

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட்னர்.

இந்த சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று மதியம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்பட்ட போது தப்பித்துள்ளனர். இதனால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் விவேகாந்த் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை புங்குடுதீவில் அரசின் அங்கீகாரத்துடன் திருமதி. சுலோசனாம்பிகை மற்றும் கேரதீவுப் பகுதியில் ஒருவர் என சில இடங்களில் கற்றாலை வளர்ப்பு நடைபெற்று வரும் வேளையில், அவர்களின் முயற்சிக்கு இடையூறாக உள்ள சில விஷமிகள், பணத்துக்கு ஆசைப்பட்டு கடற்கரையோர கற்றாலைகளை புடுங்கி, தென்னிலங்கை வியாபாரிகளுக்கு வழங்குவது கண்டிக்கத்தக்கதென பலரும் அபிப்பிராயம் தெரிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

–தகவல் & படங்கள்… “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”வுடன் புங்குடுதீவு சத்துருக்கன்…

Comments (0)
Add Comment