புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின், விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பம்..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பம்..!

இன்றையதினம் நடைபெற்ற வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின்) செல்வன் கோபிகன் 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 400m ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்டு மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலயமட்ட 16 வயதின் கீழ் வலைப்பந்தாட்டப் போட்டியில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம் மூன்றாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உடற்கல்விக்கு ஆசிரியர் இல்லாத நிலையிலும் ஆசிரியர் செல்வி சொ.பிறேமலதா அவர்களின் மிகக்குறுகியகால பயிற்றுவிப்பில் இச்சாதனையை எம்மால் நிலைநாட்ட முடிந்தது.

தகவல் & படங்கள்… பாடசாலை சமூகம். (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)

Comments (0)
Add Comment