தொடரும் “புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய” மாணவர்களின் சாதனைகள்..! (படங்கள்)

தொடரும் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவர்களின் சாதனைகள்..! (படங்கள்)

நேற்றைய வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில், சாதனைகள் புரிந்த புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவ மாணவிகள் இன்றையதினம் நடைபெற்ற போட்டியிலும் சாதனைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

**கல்லூரிகளை வீழ்த்தி கணேசா சாதனை..!

இன்று நடைபெற்ற வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் 12 வயதின் கீழ் ஆண்களுக்கான 4 x 50 அஞ்சலோட்ட நிகழ்வில் முதலாம் இடத்தைப் பெற்று எமது வீரர்கள் சாதனை படைத்து மகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

**வலயமட்ட மெய்வல்லுனர் நிகழ்வில் தொடரும் வெற்றிகள்..!

அதேபோல் இன்றையதினம் நடைபெற்ற 16 வயதின்கீழ் பெண்களுக்கான 4 x 400M அஞ்சல் ஓட்டநிகழ்வில் இரண்டாம் இடத்தையும்,
18 வயதின்கீழ் ஆண்களுக்கான 800M ஓட்ட நிகழ்வில் செல்வன் கோபிகன் இரண்டாம் இடத்தையும்,
18 வயதின்கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் செல்வன் சுகந்தன் மூன்றாம் இடத்தையும்,
தமதாக்கி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

**பயிற்சி – முயற்சி – தொடர்ச்சி – வெற்றி..!

இவர்களை பயிற்றுவித்து போட்டி நிகழ்விற்கு அழைத்துச் சென்ற எமது பாடசாலை வரலாற்று ஆசிரியர் செல்வி சொ.பிறேமலதா அவர்களையும், வீர வீராங்கனைகளையும் பாராட்டுவோம், மகிழ்வடைவோம்.

தகவல் & படங்கள்… பாடசாலை சமூகம். (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)

புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின், விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பம்..! (படங்கள்)

Comments (0)
Add Comment