புங்குடுதீவு கிணறுகளில் கொள்ளையிடப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீர்!! (படங்கள்)

புங்குடுதீவு வல்லன் நாவில் பகுதியில் மக்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக்கிணறுகளில் தனிநபர்கள் சிலர் பௌசர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வியாபாரத்தில் ஈடுபடுவதால், இப்பொதுக் கிணறுகளை நம்பி வாழும் பொது மக்கள் (குடிக்க, குளிக்க) தண்ணீர் இல்லாமையால் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்களின் அவலநிலையை கருத்தில்கொண்டு தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ஒரு புறமிருக்க மக்களின் பாவனைக்குரிய பொதுக்கிணறுகளில் களவாக தண்ணீரை பௌசரில் ஏற்றுவதால், கிணறுகளில் இருந்த நல்ல தண்ணீர் உவப்பு நீராக மாற்றமடைந்துள்ளதுடன், முழுமையாக தண்ணீர் வற்றிவிட்டது.

பொதுமக்களின் அவலநிலையை கருத்தில்கொண்டு. சம்பந்தபட்ட தரப்புகள் இவ்விடயம் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment