வேலணையில் பாம்பு தீண்டி, புங்குடுதீவு தபால் உத்தியோகத்தர் மரணம்..! (படங்கள்)

வேலணையில் பாம்பு தீண்டி, புங்குடுதீவு தபால் உத்தியோகத்தர் மரணம்..! (படங்கள்)

புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும் வேலணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சசிதரன் அவர்கள் அரவம் (பாம்பு) தீண்டி, அகால மரணமானார் எனத் தெரிய வருகிறது.

புங்குடுதீவு தபால் அலுவலக உத்தியோகத்தரும், மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய பொருளாளரும், மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் ஆலய பொருளாளரும், புங்குடுதீவு நாகதம்பிரான் ஆலய பொருளாளரும், ஊரதீவு சனசமூக நிலைய உபதலைவருமான “சமூக தொண்டர்” திரு. நல்லதம்பி சசிதரன் அவர்களே 31.03.2019 அன்று (நேற்றிரவு) அகால மரணமானார் எனத் தெரிய வருகிறது.

நேற்றிரவு வயலூர் முருகன் ஆலய திருவிழாவில், தொண்டாற்றி விட்டு வீடு சென்றிருந்த நிலையில், அரவம் தீண்டி அகால மரணமானார் எனத் தெரிய வருகிறது.

தகவல்… புங்கையூரான்.

Comments (0)
Add Comment