மேச்சேரி அருகே சோகம் – அரசு பஸ்சில் தூங்கிய டிரைவர் மரணம்..!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து மேச்சேரி வழியாக கீரைக்காரனூருக்கு நேற்று இரவு டவுன் பஸ் ஒன்று சென்றது.

அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வில்லிபாயைத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 56) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.

இரவு அந்த பஸ் கீரைக் காரனூரில் நிறுத்தப்பட்டது. பின்னர் பஸ்சுக்குள் டிரைவர் செல்வராஜும், கண்டக்டரும் தூங்கினார்கள்.

இன்று காலை 5 மணிக்கு பஸ் மீண்டும் ஓமலூருக்கு புறப்பட வேண்டும். அதிகாலை கண்டக்டர் எழுந்து பார்த்தபோது செல்வராஜ் எழும்பவில்லை. அவரை கண்டக்டர் தட்டி எழுப்பினார். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அங்கு விரைந்து வந்து செல்வராஜை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இறந்த செல்வராஜுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வராஜ் உடல் மருத்துவ பரிசோனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment