“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், கிழக்கூர் பகுதியில் “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கை… (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், கிழக்கூர் பகுதியில் “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கை… (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின் நிதி உதவியுடன், புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, முன்னாள் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை”, ஒருமாதத்துக்கு முன்னர் ஆளுநரின் செயலாளர் “மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் அவர்களினால் வயலூர் முருகன் ஆலயம், கமலாம்பிகை வித்தியாலம் தாண்டி புங்கடி வரையான மடத்துவெளி பிரதான வீதியெங்கும் மட்டுமல்லாது, மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயம் வீதியெங்கும் “தொடர்ச்ச்சியாக மின்விளக்குகள்” பொருத்தப்பட்டது நீங்கள் அறிந்ததே.

அதேபோல் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், சூரிச் சிவாஸி எனும் திரு.ஆ.பிரசாத், “ஒபேர்புர்க் குமார்” எனும் திரு.வே.கிருஷ்ணகுமார் ஆகியோரின் நிதி உதவியுடன், புங்குடுதீவு முதலாம் வட்டாரமான பகுதியில் இருந்து இறுப்பிட்டி வீதிக்கு செல்லும் பகுதியின் மானாவெள்ளை வீதி (அடைகாத்தகுளம்) பகுதிக்கு பத்து மின்விளக்குகளையும், பெருங்காட்டு சந்தியில் இருந்து இறுப்பிட்டி வீதியில் நண்பர்கள் சனசமூக நிலையம் வரை ஐந்து மின்குமிழ்களும், அத்துடன் சமுர்த்தி வீதி எனும் வீதியில் ஐந்து மின்குமிழ்களும், என மொத்தமாக இருபது மின்விளக்குகள் பொருத்தப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக “புங்குடுதீவெங்கும் மின்விளக்கு” பொருத்தும் நடவடிக்கை, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் சிறிது இடைவெளி விடப்பட்டு இருந்த போதும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம்” புங்குடுதீவு கிழக்கூர், இறுப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தோர் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கையினை அடுத்து ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஊடாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, முதற்கட்டமாக இன்றையதினம் புங்குடுதீவு கிழக்கூர் பகுதியில் அம்மாக்கடை சந்தியில் இருந்து பெத்தப்பா கோவிலுக்கு செல்லும் வீதியிலும், புங்குடுதீவு போக்கத்தை மாரியம்மன் கோவில் பகுதியிலும் சில மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.

இதில் நான்கு மின்விளக்குகளுக்கான செலவாக அமரர்.இரத்தினராசா தேவராசா அவர்களின் அன்புமகன் திரு.தேவராசா சுதன் அவர்கள், பின்லாந்து நாட்டில் இருந்து, ஒன்றிய இலங்கை வங்கி கணக்கிலக்கத்துக்கு இருபதினாயிரம் ரூபா அனுப்பி இருந்தார். ஏனைய மின்விளக்குகள் ஒன்றிய செலவில் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரமளவில் இருப்பிட்டியின் சில பகுதிகளிலும் “சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில், மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

எமது வேண்டுகோளை சிரமேற்கொண்டு கடமையாற்றிய வடமாகாண ஆளுநரின் செயலாளர் “மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் அண்ணர் அவர்களுக்கும், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி. த.சுலோசனாம்பிகை, உட்பட அனைவருக்கும் எமது நன்றி…

குறிப்பு..-
** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், சுவிஸ் வாழ் அனைத்து மக்களும் இணைந்து எதிர்வரும் 25.05.2019 சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) புர்கடோர்ப் மாநிலத்தில் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு.. -2019 (“ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்”.) தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நாளை 12.05.2019 ஞயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் நடைபெற உள்ளதினால், அனைத்து சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு.. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர்) -077.9485214, திரு,அ.கைலாசநாதன் (குழந்தை -பொருளாளர்) -079.9373289, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
11.05.2019

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், முதலாம் வட்டார மானாவெள்ளை வீதி “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்..! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின்; “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கைகள் பூர்த்தி…! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியில் “தொடர்ச்சியாக மின்விளக்குகள்”…! (படங்கள் & வீடியோ)

Comments (0)
Add Comment