சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களித்த 103 வயது மூதாட்டி..!!

தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதியில் துளசியம்மாள் என்ற 103 வயதான மூதாட்டி தனது ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினார். உறவினர்கள் துணையுடன் வந்த துளசியம்மாள் பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Comments (0)
Add Comment