பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..!!

பாகிஸ்தானில் உள்ள சக்திவாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர், குஜ்ரன்வாலா கார்ப்ஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வசித்து வந்த ஐஎஸ்ஐ தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பாயிஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)
Add Comment