பக்கா பிளான்.. மெல்ல மெல்ல லவட்டி.. அதிர வைத்த சுதா.. ஷாக்கில் ஐசரி வேலன் குடும்பம் !! (படங்கள்)

பலநாள் திருடி ஒருநாள் மாட்டிக்கிட்டார்.. மொத்தமா திருடினால் சந்தேகம் வரும் என்று.. பிளான் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டைய போட்டுள்ளார் வேலைக்காரி சுதா! காஸ்ட்லி வேலைக்காரி போல… அதான் வைரநகையாகவே திருடி இருக்கிறார்! பிரபல நடிகர் ஐசரி வேலனின் மகன்.. நடிகர், அரசியல்வாதி.. கல்வி நிறுவன ஓனர், நடிகர் சங்கத்தில் சம்பந்தப்பட்டவர், திரைப்பட தயாரிப்பாளர்.. என இத்தனை புகழுக்கும் சொந்தக்காரர்தான் ஐசரி கணேஷ். இவரது சகோதரி மயிலாப்பூர் ரங்கா தெருவில் வசித்து வருகிறார். இவர் பெயர் மகாலட்சுமி கமலக்கண்ணன். இவர் வீட்டில் வேலை செய்து வந்தவர் பெயர் சுதா. வயசு 28 ஆகிறது.

சொகுசு வாழ்க்கை சொகுசு வாழ்க்கை கிட்டத்தட்ட 15 வருஷமாக, அதாவது 2003-ம் வருடம் முதல் இந்த வீட்டில்தான் வேலை பார்த்து வருகிறார். வீட்டு வேலையை பார்த்தாரோ இல்லையோ, வந்த கொஞ்ச நாளிலேயே நகைகளை திருட ஆரம்பித்தார்.

மொத்தமாக திருடினால் டவுட் வந்துவிடும் என்பதால், இன்ஸ்ட்டால்மென்ட்டில் திருடி இருக்கிறார். திருடியதை கொண்டு போய் புருஷனிடம் தந்துவிடுவார். அந்த புருஷன் அதை அடகு வெச்சு, குடும்பமே சொகுசாக வாழ ஆரம்பித்துள்ளது.

15 வருட திருட்டு 15 வருட திருட்டு 15 வருஷமாகவே இப்படி நடப்பதை வீட்டில் உள்ளவர்கள் சரியாக கவனிக்கவில்லை போல தெரிகிறது. சில நாட்களுக்கு முன்புதான் கவனித்திருக்கிறார்கள். சுதாவின் நடவடிக்கையில் ஒரு தினுசு மாற்றம் இருக்கிறதே என்று சந்தேகப்பட்டிருக்கிறார்கள். அதுக்கப்புறம்தான் அவரை நோட்டீஸ் பண்ண ஆரம்பித்தனர்.

நகைகள் காணவில்லை நகைகள் காணவில்லை இப்படித்தான் கடந்த 12-ம் தேதி வழக்கம்போல வேலைக்கு வந்த சுதா, வழக்கம்போல அபேஸில் ஈடுபட்டார். நேராக பீரோவை திறந்து சில நகைகளை கொண்டு போய்விட்டார். அவர் போனபிறகு, பீரோவை திறந்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்தபோதுதான், ஏகப்பட்ட நகைகள் மிஸ்ஸிங். விசாரணை விசாரணை ஷாக் ஆன மகாலட்சுமி, சுதாவை கூப்பிட்டு இதைப்பற்றி கேட்டும், சுதா அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடித்தார்.

உடனே மகாலட்சுமி அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததன்பேரில் விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் சுதா எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வைத்தார். பறிமுதல் பறிமுதல் இதுவரைக்கும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி உள்ளாராம். இதில் பெரும்பாலும் வைரம்தான்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இந்த காரியத்தில் இறங்கி விட்டாராம். கணவர் பெயர் அன்பு. இவரிடம் நகையை விற்று, விற்ற பணத்தை வட்டிக்கு விட்டு.. இந்த ஜோடி சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறது. இதையடுத்து சுதாவை போலீசார் கைது செய்ததுடன், 18 சவரன் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.

Comments (0)
Add Comment