உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஆர்ச்சர். உலக கோப்பை வரலாற்றில் பரம வைரிகளான அணிகள் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும். இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆஸி. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், ஆரான் பின்ச் நிதானமாக விளையாடி அணிக்கு நிலையானதொடக்கத்தை ஏற்படுத்தினர் வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய பின்ச், ஆர்ச்சர் வீசிய 35.2வது ஓவரில் சதத்தை எட்டினார். ஆனால்.. அடுத்த பந்தில் அவரசப்பட்டு.. கேட்ச் கொடுத்து, தமது விக்கெட்டை இழந்தார். பின்ச் சதம் ஒரு சாதனை என்றாலும்… அதன் மூலம், ஆர்ச்சரும் ஒரு சாதனையை சத்தமில்லாமல் படைத்திருக்கிறார்.

அதாவது, பின்ச் விக்கெட்டை எடுத்ததன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் ஆர்ச்சர். உலகக்கோப்பை தொடரில் அவர் இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இயன் போத்தம் உடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார். போத்தம் 1992 உலகக் கோப்பை தொடரில் 16 விக்கெட்டுகளை எடுத்து, அசத்தியவர்.

இங்கிலாந்தை காலி செய்த ஆஸி..!! செமி பைனலில் நுழைந்து அசத்தல்!! (படங்கள், வீடியோ)

Comments (0)
Add Comment