இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிரிப்பாய் சிரித்த ரன் அவுட்..!! (படங்கள்)

இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவுட்டான விதத்தை பார்த்து சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் 52 பந்திலும், ஆரோன் பிஞ்ச் 61 பந்தில் 50 அரைசதம் அடித்தனர். 22.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

வார்னர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதமடித்து அவுட் சதமடித்து அவுட் அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 23 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பின்ச் சிறப்பாக விளையாடி 115 பந்தில் சதம் அடித்தார்.

ஆனால் சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 35.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்திருந்தது. மேக்ஸ்வெல் காலி மேக்ஸ்வெல் காலி 87 பந்துகள் மீதமிருந்ததால் ஆஸ்திரேலியா எளிதாக 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே படுத்து விட்டது. ரன் அவுட் ரன் அவுட் அதில் ஸ்டோய்னிஸ் ரன் அவுட்டை பார்த்து தான் இணையதளவாசிகள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். ஸ்மித்துடன் சேர்ந்து அவர் ஸ்கோரை 228 ரன்களுக்கு கொண்டு சென்ற போதும் அந்த காமெடி நிகழ்ந்தது. ஸ்டோய்னிஸ் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

அவர் அவுட்டான விதம் இணையத்தில் ஏக மாஸ். 2வது ரன்னுக்கு ஆசை 2வது ரன்னுக்கு ஆசை ஸ்மித் லாங் ஆப் திசைக்கு ஒரு பந்தை அடிக்க முயல, அது டீப் திசைக்கு செல்கிறது. ஸ்டோய்னிஸ் நான் ஸ்டிரைக் திசையில் இருந்து, வேகமாக ஓடி ஒரு ரன் எடுக்கிறார்.

பின்னர், ஸ்மித்தை பார்க்காமல் விறுவிறுவென 2வது ரன்னை எடுக்க ஓடுகிறார். சிரிப்போ சிரிப்பு சிரிப்போ சிரிப்பு vஸ்மித்தும் கிளம்புவது போல கிளம்பி கண்ணிமைக்கும் நேரத்தில் பொசிஷனை மாற்றுகிறார். இருவரும் ஓடி வந்து ஒரே முனையில் இருக்க.. களத்தில் ஏக குழப்பம். பந்தை சேகரித்த ரஷித், பட்லருக்கு அனுப்ப, ஸ்டோய்ன்ஸ் ரன் அவுட். ஆட்டத்தில் தேவையற்ற, சிரிப்பாய் சிரிக்கும் ரன் ரவுட். இணையதள வாசிகள் ஏகத்துக்கும் வச்சு செய்து வருகின்றனர்.

இங்கிலாந்தை காலி செய்த ஆஸி..!! செமி பைனலில் நுழைந்து அசத்தல்!! (படங்கள், வீடியோ)

உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை…!!

Comments (0)
Add Comment