என் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்!! (படங்கள்)

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவின் வீடியோவை பார்த்து அவரின் மனைவி கதறி அழுததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சர்ப்ராஸ் அளித்த பேட்டி ஒன்றில் இதை குறிப்பிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடரில் வரிசையாக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இது தற்போது பாகிஸ்தான் ரசிகர்களை பெரும் கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

முக்கியமாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததுதான் அந்த அணிக்கு மிக மிக வருத்தமான விஷயம். என்ன வருத்தம் என்ன வருத்தம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 336 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதையடுத்து பாகிஸ்தான் கேப்டனை அந்நாட்டு ரசிகர்கள் மோசமாக கிண்டல் செய்தார்கள்.

இணையம் முழுக்க பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிறைய மீம்கள் ஷேர் செய்யப்பட்டது. பன்னி என்றார் பன்னி என்றார் இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸை ரசிகர் ஒருவர் மாலில் வைத்து பன்னி என்று திட்டினார். இது பெரிய சர்ச்சையானது. சர்ப்ராஸை அந்த ரசிகர் திட்டும் நேரத்தில் சர்ப்ராஸ் மகனும் அவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வீடியோவாக வெளியானது. ஆனால் சர்ப்ராஸ் அங்கு எந்த பிரச்சனையும் செய்யாமல் வந்துவிட்டார். இதற்கு பின் நடந்த சம்பவம் குறித்து சர்ப்ராஸ் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

அறைக்கு சென்றால் அறைக்கு சென்றால் சர்ப்ராஸ் தனது பேட்டியில், நான் அந்த சம்பவத்திற்கு பின் வருத்தத்துடன் அறைக்கு சென்றேன். ஆனால் அந்த வீடியோ அதற்குள் வைரலாகி இருந்தது. நான் அறைக்கு சென்ற போது என்னுடைய மனைவி அழுது கொண்டு இருந்தார். அவர் நான் இருந்த வீடியோவை பார்த்து மோசமாக அழுது கொண்டு இருந்தார். நான் அவரிடம் சூழ்நிலையை நீண்ட நேரம் விளக்கினேன். ரசிகர்கள் எப்படி எல்லாம் செயல்படுவார்கள்.

என்ன நடக்கும் என்று கூறினேன் . என்ன விளக்கம் என்ன விளக்கம் ஆனால் அவர் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. இது பொதுவாக நடக்க கூடிய விஷயம்தான். இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்று நான் அவரிடம் கூறினேன். ஆனால் அந்த வீடியோ என் மனைவியை கொஞ்சம் பாதித்தது உண்மைதான். அவர் மிகவும் வருத்தம் அடைந்தார் என்பது உண்மைதான், என்று சர்ப்ராஸ் குறிப்பிட்டு உள்ளார்.

Comments (0)
Add Comment