இந்திய பேட்ஸ்மேன்களுக்கு செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி!! (படங்கள்)

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி இன்று மிகவும் விறுவிறுப்பாக இருக்க போகிறது. பல்வேறு காரணங்களால் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. இனி நடக்கும் போட்டிகளில் அணிகள் எப்படி விளையாடுகிறது அதை பொறுத்தே செமி பைனலுக்கு செல்லும் அணிகள் தீர்மானிக்கப்படும். இந்தியா இன்னும் 4 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 4 போட்டிகளில் இந்தியா கண்டிப்பாக 2 போட்டிகளில் வென்றால் செமி பைனலுக்கு சென்று விட முடியும்.

இன்று போட்டி இன்று போட்டி இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டி இந்திய அணிக்கு பல்வேறு வகையில் சாதகமாக இருக்கிறது. முதல் விஷயம் இன்று நடக்கும் போட்டி பேட்டிங் பிட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெல்லும். அதனால் இந்தியா பெரும்பாலும் டாஸ் வெல்லவே முயற்சி செய்யும். முக்கியம் முக்கியம் இங்குதான் இந்தியா பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அதனால் இந்திய வீரர்கள் மிகவும் உற்சாகமாக இன்று விளையாடுவார்கள்.

அதே சமயம் இங்கு நல்ல பவுலிங் ஆர்டர் கொண்ட அணி மட்டுமே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும். இந்திய அணியில் பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப், பாண்டியா என்று சிறப்பான பவுலிங் ஆர்டர் இருக்கிறது. ஆனால் பவுலிங்கில் மேற்கு இந்திய தீவுகள் அத்தனை சிறப்பாக இல்லை. வாய்ப்பு உள்ளது வாய்ப்பு உள்ளது அதனால் இன்று முதலில் களமிறங்கும் அணி 300+ ரன்களை எடுக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாவது இறங்கும் அணியும் அந்த ஸ்கோரை நெருங்கி வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு இந்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் அதிக சிக்ஸ், பவுண்டரி என்று அதிரடியாக ஆட இந்த பிட்ச் சாதகமாக இருக்கும் என்கிறார்கள்.

ரோஹித் சர்மாவும் இன்று அதிரடி காட்ட வாய்ப்புள்ளது . ஆனால் என்ன ஆனால் என்ன இதில் ரசிகர்களுக்கும் இன்னொரு கொண்டாட்டமான செய்தி ஒன்று உள்ளது. அதன்படி இன்று போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நன்றாக வெயில் அடித்து வருகிறது. இதனால் மைதானம் நன்றாக உலர்ந்து இருக்கிறது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு மழையால் எந்த விதமான தடங்கலும் இருக்காது என்கிறார்கள்.

Comments (0)
Add Comment