பேட்டிங்கில் மண்ணைக் கவ்விய வெ.இண்டீஸ் பரிதாப தோல்வி! (படங்கள்)

உலகக்கோப்பை லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்தப் போட்டியில் பேட்டிங்கில் கோலி, பந்துவீச்சில் பும்ரா – ஷமி சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடுகள் பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் படுத்து விட்டது. ரோஹித் அவுட் சர்ச்சை ரோஹித் அவுட் சர்ச்சை இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்தியா.

துவக்க வீரர் ரோஹித் சர்மா 18 ரன்களில் மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்தார். அது பெரிய சர்ச்சை ஆனது. அடுத்து கோலி, ராகுல் இணைந்து சிறப்பாக கூட்டணி அமைத்து ஆடினர். நடுவே சறுக்கல் நடுவே சறுக்கல் ராகுல் மிகவும் பொறுமையாக ஆடி 64 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் ஷங்கர் 14, கேதார் ஜாதவ் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால், இந்திய அணி 28.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. சோதித்த தோனி சோதித்த தோனி அடுத்து கோலியுடன் சேர்ந்த தோனி நிதானமாக ஆடி வெறுப்பேற்றினார். சிறப்பாக ஆடிய கோலி அரைசதம் கடந்து 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் பண்டியாவுடன் இணைந்து மேலும் டொக்கு வைக்க துவங்கினார் தோனி. பண்டியா அபாரம் பண்டியா அபாரம் எனினும், ஹர்திக் பண்டியா 38 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து அணிக்கு பெரிய உதவி செய்தார். தோனியின் ஸ்ட்ரைக் ரேட் நீண்ட நேரத்திற்கு 60-ஐ தாண்டவில்லை. எனினும், கடைசி ஓவரில் வேகமெடுத்த தோனி, அந்த ஓவரில் 2 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து அரைசதம் கடந்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது. கோலி 72, தோனி 56* ரன்கள் எடுத்து இருந்தனர். பந்துவீச்சு எப்படி? பந்துவீச்சு எப்படி? வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓஷேன் தாமஸ் (ஓவருக்கு 9 ரன்கள்), பிராத்வைட் (ஓவருக்கு 11 ரன்கள்) தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். காட்ரேல் 2, கீமர் ரோச் 3, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

சேஸிங் படுமோசம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 267 ரன்கள் எளிய இலக்கு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தவறு என நிரூபித்தது அந்த அணி. சுனில் ஆம்ப்ரிஸ் 31, நிக்கோலஸ் பூரன் 28 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் வீரர்கள் எடுத்ததில் அதிகபட்ச ரன்கள்.

மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பும்ரா, ஷமி கலக்கல் பும்ரா, ஷமி கலக்கல் பும்ரா – ஷமி கூட்டணி வழக்கம் போல தெறிக்க விட்டனர். ஷமி 6.2 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா 6 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் சாய்த்தார். சாஹல் 2, குல்தீப் 1, பண்டியா 1 விக்கெட் வீழ்த்தினர்.

வெ. இண்டீஸ் பரிதாபம் வெ. இண்டீஸ் பரிதாபம் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியின் தோல்வியுடன் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது.

Comments (0)
Add Comment