கோலி, ஷமியின் அந்த செயல்.. முகம் சுழித்த ரசிகர்கள்..!! (படங்கள்)

வெஸ்ட் இண்டீசின் காட்ரெல் போன்று சல்யூட் அடித்து கேப்டன் கோலி, முகமது ஷமி ஆகியோர் செய்த கிண்டல் வீடியோ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ராகுல் களமிறங்கினர். ரோகித் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அவரது அவுட் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியது தனி ரகம். தொடர்ந்து ராகுல் 48 ரன்னிலும், விஜய் சங்கர் 14, கேதர் ஜாதவ் 7 என சொற்ப ரன்களில் இந்திய வீரர்கள் நடையை கட்டினர்.

இருப்பினும் பொறுப்புடன் ஆடி வந்த கேப்டன் கோலி தனது 53வது ஒரு நாள் அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். 268 ரன்கள் அடித்தது 268 ரன்கள் அடித்தது இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. தோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனை தொடர்ந்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி, 2வது இடம் வெற்றி, 2வது இடம் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. வெஸ்ட் இண்டீசின் விக்கெட்டுகளை இந்தியா பதம் பார்த்தது. பவுலிங்கில் ஆதிக்கம் பவுலிங்கில் ஆதிக்கம் முக்கிய வீரர்களை மிக விரைவாக அவுட்டாக்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு பெரும் நெருக்கடி அளித்தது. முடிவில், 34.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது வெஸ்ட் இண்டீஸ்.

வைரலான சல்யூட் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கடைசி விக்கெட் விழும் போது இந்திய அணியின் பவுலர் ஷமி செய்த சேட்டை தான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. கடைசி விக்கெட்டை எடுத்த முகமது ஷமி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் போல் சல்யூட் அடித்து கிண்டல் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோலியும் தன் பங்குக்கு கிண்டல் செய்தார்.

ஏன் இந்த சல்யூட்? வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஷெல்டன் காட்ரெல் விக்கெட் எடுத்தவுடன் சல்யூட் அடித்த அந்த வெற்றியை கொண்டாடுவார். அதன் மூலம் உலக கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் பெற்றவர். பாக். உடனான முதல் போட்டியில் சல்யூட் அடித்து தமது ஸ்டைலை தொடங்கியவர். ஜமைக்கா ராணுவத்தில் வீரராக பணிபுரிந்ததை நினைவு படுத்தி, அதை கவுரவப்படுத்தும் வகையில் சல்யூட் அடிப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி ஒரு அணி வெற்றி பெறுவதும், மற்றொரு அணி தோல்வி அடைவதும் விளையாட்டில் இருப்பது சகஜம். ஜெயித்துவிட்டோம் என்பதற்காக களத்தில் இது போன்று நடந்து கொள்வது ஏற்க முடியாத ஒன்று என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றனர்.

Comments (0)
Add Comment