9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

எனவே தென் ஆப்பிரிக்கா அணி போட்டியில் வெற்றி பெற 204 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 37.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்க அணி சார்பில் ஆட்டமிழக்காமல் டு பிளசிஸ் 96 ஓட்டங்களையும் ஹஷிம் அம்லா 80 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment