கூட்டணி சேர்ந்து வசை பாடிய இந்திய – பாக். ரசிகர்கள்! (படங்கள்)

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அம்பயர் அளித்த தவறான தீர்ப்பால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இந்தியா – இங்கிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் தெறிக்க விட்டு ரன் குவித்து வந்தனர். 11வது ஓவர் 11வது ஓவர் அப்போது கேப்டன் கோலி என்ன செய்வது என புரியாமல், அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் ஓவர் கொடுத்து வந்தார். 11வது ஓவர் ஹர்திக் பண்டியாவிற்கு கிடைத்தது.

பண்டியா முதல் நான்கு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஜேசன் ராய் கேட்ச் ஜேசன் ராய் கேட்ச் ஐந்தாவது பந்தை பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அடிக்க முயன்று தவறவிட்டார். பந்தை விக்கெட் கீப்பர் தோனி கேட்ச் பிடித்தார். இது கேட்ச் என கருதிய தோனி மற்றும் இந்திய அணியினர் அவுட் கேட்டு அம்பயர் அலீம் தாரிடம் கேட்டனர். அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். விக்கெட் வாய்ப்பு விக்கெட் வாய்ப்பு ஆனால், பந்து ஜேசன் ராய் கிளவுஸில் பட்டு, தோனியால் கேட்ச் பிடிக்கப்பட்டு இருந்தது. அம்பயர் மறுத்த பின்னர் இந்திய அணி ரிவ்யூ கேட்கவில்லை. அதனால், விக்கெட் வாய்ப்பு பறிபோனது.

அதன் பின் ஜேசன் ராய் 66 ரன்கள் சேர்த்தே ஆட்டமிழந்தார். தவறவிட்ட தோனி தவறவிட்ட தோனி தோனி தான் ரிவ்யூ கேட்கலாமா இல்லையா என முடிவு செய்து கூறி இருக்க வேண்டும். விக்கெட் கீப்பராக அவருக்குத் தான் அது கேட்ச்சா? இல்லையா? என்பது குறித்து தெரியும். ஆனால், தோனியும் தவறவிட்டார். அம்பயர் அலீம் தார் அம்பயர் அலீம் தார் இந்த நிலையில் இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் அம்பயர் அலீம் தார் மீது கோபம் கொண்டு, இணையத்தில் அவரை கிண்டல் செய்தும், திட்டியும் வருகின்றனர். இந்திய ரசிகர்கள் சரி.. ஏன் பாகிஸ்தான் ரசிகர்கள் திட்டுகிறார்கள்? பாகிஸ்தான் அணியின் வாய்ப்பு

பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தோல்வி அடைய வேண்டும் என்ற நிலை இருப்பதால், பாகிஸ்தான் ரசிகர்கள் இன்று இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அம்பயர் அலீம் தார் தவறான தீர்ப்பு கொடுத்தது தங்கள் நாட்டுக்கு தான் பாதிப்பு என பாகிஸ்தான் ரசிகர்களும் அவரை வசை பாடினர்.

Comments (0)
Add Comment