அவுட்டானதும் செம டென்ஷனான ரோகித் ஷர்மா!!!

முக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்துள்ளார் ரோகித் ஷர்மா. அவர் அவுட்டான விதம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது என்றால் அது பொய் இல்லை. 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வோக்ஸ் பந்தில் ரோகித் ஷர்மா அவுட்டானார். ஓவரின் முதல் பந்து அதுவாகும். ரன் ரேட் கிடுகிடுவென தேவைப்பட்டதால், முதல் பந்திலேயே, வோக்ஸ்சை அட்டாக் செய்யும் வகையில் ஒரு ஷாட்டை ஆடினார். ஆனால் அங்குதான் ஒரு தந்திரம் செ்யதிருந்தார் வோக்ஸ். அந்த பந்தை வெறும் 125 கிமீ வேகத்தில் ஸ்லோவாக வீசினார்.

இதற்கு காரணம், முதல் பந்தையே பேட்ஸ்மேன் அடித்து ஆடுவார் என்று நினைத்து ஸ்லோ பாலாக வீசினார். ரோகித் ஷர்மா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே, ஓங்கி அடிக்க போய், பந்து மெதுவாக வந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றுவிட்டது. முதல் பந்தே ஸ்லோவாக வரும் என ரோகித் எதிர்பார்க்காத நேரத்தில், அதை செய்துவிட்டார் வோக்ஸ்.

எனவேதான், செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேன் இப்படி ஒரு மோசமான வகையில் அவுட்டாக நேர்ந்து என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்திருந்தாலாவது பரவாயில்லை. இப்படி கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டாரே என்ற ஏமாற்றம் ரசிகர்களுக்கு. ரோகித் ஷர்மாவும் கூட அவுட்டாகிவிட்டு, மூடவுட்டாகியிருந்தார். ரசிகர்களே கவலைப்படாதீர்கள். ஒரு பிக் இன்னிங்ஸ் ரோகித்திடம் வந்தே தீரும் எப்படியும் அடுத்தடுத்த போட்டிகளில் என்பது அவரது ஃபார்மை வைத்து புரிந்து கொள்ளக்கூடியது.

Comments (0)
Add Comment