இந்திய அணியில் தோனி ஓரங்கட்டப்படுகிறாரா? (படங்கள்)

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மீண்டும் மாற்றம் நிகழ்ந்து இருப்பதால் அணியில் மூத்த வீரர் தோனி மீண்டும் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. செமி பைனலுக்கு எந்த அணி எல்லாம் செல்லும் என்று இந்த வாரம் தெரிந்துவிடும். இங்கிலாந்து அணி செமி பைனலுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று இன்று நடக்கும் போட்டியிலேயே தெரிந்துவிடும். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. என்ன விறுவிறுப்பு என்ன விறுவிறுப்பு இரண்டு அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்த லீக் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து உள்ளது.

அந்த அணியில் பிரைஸ்டோ 111, ஜேசன் ராய் 66, பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தனர். இந்த இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பொறுமையாக ஆடி வருகிறது. இந்திய எப்படி இந்திய எப்படி இந்திய அணி சார்பாக களமிறங்கிய கே எல் ராகுல் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்து டக் அவுட் ஆனார். அதன்பின் கோலி ரோஹித் நிலைத்து நின்று ஆடினார்கள். கோலி 66, ரோஹித் 102 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார்கள். தற்போது பாண்டியா மற்றும் பண்ட் அதிரடியாக ஆடி வருகிறார்கள். என்ன மாற்றம் என்ன மாற்றம் சரியாக அணியில் அறிவிக்கப்பட்டபடி பண்ட் 4வது இடத்தில் ஆடி வருகிறார். ஆனால் பாண்டியா இரண்டு இடம் முன்னேறி 5வது இடத்தில் ஆடி வருகிறார்.

முறைப்படி கோலி அவுட்டான பின் பண்டுடன் சேர்ந்து தோனிதான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக பாண்டியா களமிறங்கி இருக்கிறார். இது தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்ற போட்டி சென்ற போட்டி சென்ற முறை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் இப்படித்தான் நடந்தது. அப்போது கோலியுடன் ஆட கேதார் ஜாதவ் களமிறங்கினார்.

ஆனால் அவர் 7 ரன்களுக்கு அவுட்டானார். இந்த போட்டியில் தற்போது தோனியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு இருக்கிறது. ஏன் இப்படி ஏன் இப்படி தோனி தொடர்ந்து நிதானமாக ஆடுவதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். அதிக ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்து இருப்பதால் தோனியை தற்போது கோலி களமிறக்கவில்லை என்கிறார்கள். ஆனால் தோனி இதனால் தன்னை நிரூபிக்க முடியாமால் போகும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Comments (0)
Add Comment