முதல் பந்தே இப்படியா.. கொல்லென்று சிரித்த வர்ணனையாளர்கள்!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று தோனி களமிறங்கிய முதல் பந்தை அழகாக விக்கெட் கீப்பரிடம் விட, வர்ணனையாளர்கள் சிரிக்க.. ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். போட்டி முக்கியமான கட்டத்தில் இருந்தபோது, ரோகித் ஷர்மா அவுட்டாக, அவருக்கு பிறகு சற்று நேரத்தில் ரிஷப் பந்த் வெளியேறிய நிலையில், தோனி களம் வந்தார்.

40வது ஓவரில், தேவைப்படும் ரன் ரேட்டாக இருந்தது. எனவே தோனி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தோனி இப்போ என்ன செய்யப்போகிறார் என்று வர்ணனையாளர் கூறியபோது, தோனி, தனது காலை முன்னால் வைத்து, அந்த பந்தை அப்படியே, கீப்பரிடம் விட்டுவிட்டார். டெஸ்ட் போட்டியில், பந்தை விடுவார்களே பேட்ஸ்மேன்கள் அப்படி.

இதைப் பார்த்ததும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளர்கள் பொசுக்கென்று சிரித்துவிட்டனர். இதைப் பார்த்த, ரசிகர்கள், கடுப்பாகிவிட்டனர். அதற்கு அடுத்த ஓவரை வோக்ஸ் போட வந்தார். அப்போது, பாண்ட்யா சிங்கிள் தட்ட, தோனி இந்த பக்கம் வர, அதைப் பார்த்த ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா, “இப்போ பாருங்க தோனி தனது அனுபவம், திறமை போன்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி, சிங்கிள் ரன் எடுத்து அந்த பக்கம் ஓடிருவார். பாண்ட்யாவுக்கு பேட் செய்ய சான்ஸ் கொடுப்பார்” என்று கிண்டல் செய்தார்.

\

Comments (0)
Add Comment