களத்தில் நடித்த கேப்டன் கோலி… வைரலான வீடியோ!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிவ்யூ கேட்பது போல் கோலி, சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பையில் இந்தியாவுக்கான முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் வெகுநேரமாக இந்திய அணி மண்டை காய்ந்தது.

அதில் ஜேசன் ராய் 66 ரன்களும், பெயர்ஸ்டோவ் 111 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இங்கிலாந்து இயன் மோர்கன் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது ஜோடி சேர்ந்த ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது.

சுழற்பந்து வீச்சாளர்கள் கொடுத்த அதிகப்படியான ரன்கள் மிகப்பெரிய ஸ்கோரை இங்கிலாந்து எட்ட வழி வகுத்தது. 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை குவித்தது. போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெயர்ஸ்டோவ் அடிக்க முயன்று தவறவிட்ட பந்தை தோனி கேட்ச் பிடித்தார்.

உடனே இந்திய அணியின் கேப்டன் கோலி நடுவரிடம் அவுட் தருமாறு முறையிட்டார். ஆனால் நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார். அதனால் கோலி ரிவ்யூ கேட்பது போல் சென்று பின்னர் கேட்காமல் தவிர்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment