இதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி விஸ்வரூபம்..!!

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் செமி பைனலுக்கு தகுதி பெறும். இந்திய அணியில் இன்று இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. என்ன மாற்றம் இந்திய அணியில் கடந்த சில நாட்களாக சொதப்பிய கேதார் ஜாதவ் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த போட்டியில் சரியாக பந்து வீசாத குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

விளையாடும் அணி தற்போது வங்கதேசத்திற்கு எதிராக கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, தோனி, தினேஷ் கார்த்திக், பாண்டியா, பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா ஆகியோர் விளையாடுகிறார்கள். என்ன ரிஸ்க் இந்திய அணி ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் களமிறங்கி உள்ளது. சாஹல் மட்டும்தான் இந்திய அணியின் ஸ்பின் பவுலர். கடந்த போட்டியில் இதே மைதானத்தில் ஸ்பின் பவுலிங்கில் அதிக ரன்கள் சென்றது. அதனால் இன்று குல்தீப் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

4 ஸ்பீட் பவுலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்திய அணியில் புவனேஷ்வர்குமாரையும் சேர்த்து 9 பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். என்ன இதனால் இந்திய அணியின் பேட்டிங் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால் இந்திய அணி தற்போது மாற்று பவுலர்கள் இல்லாமல் களமிறங்கி இருக்கிறது. ஒரே ஒரு ஸ்பின் பவுலர் எப்படி சமாளிப்பார் என்றும் தெரியவில்லை. இதனால் பவுலர்கள் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் பெரிய பிரச்சனையாகும். ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் ஓவர் போட கூடிய வீரர்கள். ஆனாலும் இவர்கள் எல்லாம் ஓவர் போட்டால் அதிக ரன்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment