பாதியில் வெளியேறிவிட்டு.. பதறியடித்து மீண்டும் ஓடி வந்த தோனி.. போட்டிக்கு நடுவே நடந்த குளறுபடி..!!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாதியில் வெளியேறிய தோனி மீண்டும் களத்திற்குள் வேகமாக ஓடி வந்த சம்பவம் வைரலாகி உள்ளது. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் அதிரடியாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார்கள். இந்த வலுவான இலக்கை நோக்கி வங்கதேசம் ஆடி வருகிறது.

எப்படி இந்த போட்டியில் முதலில் சில ஓவர்கள் மட்டும்தான் தோனி கீப்பிங் செய்தார். எப்போதும் முழுவதுமாக கீப்பிங் செய்யும் தோனி இன்று மட்டும் முழுவதுமாக கீப்பிங் செய்யவில்லை. 6 ஓவர்கள் இருக்கும் போதே அவர் பாதியில் களத்தில் இருந்து வெளியேறினார். ஓய்வு எடுப்பதற்காக அவர் களத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். powered by Rubicon Project களத்தில் இல்லை ஆனால் இவர் பெவிலியனில் இருந்த போது ஷமி ஓவரில் ஷாகிப் அல் ஹசன் இன்சைட் எட்ஜ் ஆனார். ஆனால் இதற்கு கோலி எல்பிடபிள்யூ என்று விக்கெட் கேட்டார். நடுவர்கள் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை.

இதையடுத்து கோலி கீப்பராக இருந்த பண்டிடம் விக்கெட்டா என்று கேட்டார். அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. என்ன குழப்பம் இதையடுத்து கோலி குழப்பத்தோடு டிஆர்எஸ் கேட்டார். டிஆர்எஸ்ஸில் அது பேடில் மட்டும் படவில்லை. அதற்கு முன் இன்சைட் எட்ஜ் ஆகி இருக்கிறது. இதனால் அது விக்கெட் இல்லை என்று மூன்றாவது நடுவர் கூறினார். இதையடுத்து ஆட்டம் தொடர்ந்தது. என்ன கீப்பர் ஆனால் ஒருவேளை தோனி கீப்பராக இருந்து, அப்போது கோலி இது போல் சந்தேகம் கேட்டு இருந்தால் பெரும்பாலும் தோனி சரியாக வழி நடத்தி இருப்பார்.

கமெண்ட்ரி செய்தவர்களே இதைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது. என்ன ஓவர் ஆம் அடுத்த ஓவரிலேயே தோனி பெவிலியனில் இருந்து திரும்பினார். பாதி ஓவர் நடந்து கொண்டு இருக்கும் போதே தோனி பெவியலியனின் இருந்து மைதானத்திற்கு வந்தார். பதறியடித்துக் கொண்டு மீண்டும் வந்தவர், கீப்பிங் செய்ய தொடங்கினார். அவர் மீண்டும் களத்திற்க்கு வந்த போது ரசிகர்கள் கத்தி கரகோஷம் எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Comments (0)
Add Comment