ஆகாயத்தில் இருந்து வந்த பந்து.. உலகக் கோப்பை பைனலில் நிகழ்ந்த அதிசயம்.. வாயை பிளந்த ரசிகர்கள்…!!

உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. உலகக் கோப்பை தொடர் முடியும் தருவாயை எட்டியுள்ளது.

இன்னும் 3 மணி நேரத்தில் அடுத்த உலகக் கோப்பை சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும். லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்கள் இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்துள்ளனர்.

என்ன நடந்தது இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. லார்ட்ஸ் மைதானம் பவுலிங் பிட்ச் கொண்ட மைதானம் ஆகும். இங்கு சேசிங் செய்வது மிகவும் கடினம். இதனால் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

எப்படி இந்த நிலையில்தான் போட்டி துவங்கும் முன் அந்த அதிசய சம்பவம் நடைபெற்றது. சரியாக பந்து போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மைதானத்திற்குள் ஒருவர் சிவப்பு நிற உடை அணிந்து பாராசூட் மூலம் குதித்தார்.

கீழே வீரர்கள் எல்லோரும் இருக்கும் போதே மைதானத்திற்குள் அவர் பாராசூட் மூலம் குதித்தார். இவர் பாராசூட்டில் இருந்து வண்ணமயமாக சிவப்பு நிற புகை வந்து கொண்டு இருந்தது. யார் இவர் இதேபோல் 10க்கும் மேற்பட்டோர் சிவப்பு நிற உடையை அதேபோல் அணிந்து மைதானத்திற்குள் வந்தனர்.

இவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ராணுவத்தின் பாராசூட் படை பிரிவை சேர்ந்தவர்கள். இவர் ரெட் டெவில்ஸ் என்று அழைக்கப்படும் வீரர்கள் ஆவார். ஏன்
இப்படி இவர்கள் இன்றைய போட்டியின் முதல் பந்தை நடுவர்களிடம் கொடுப்பதற்காக பாராசூட்டில் வந்தனர்.

அவர்கள் வந்து பந்தை கொடுத்த பின்புதான் போட்டி துவங்கியது. போட்டியை வித்தியாசமாக தொடங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பந்தை கொண்டு வந்தனர். போட்டியின் போது வீரர் ஒருவர் பாராசூட் மூலம் மைதானத்திற்குள் வந்தது பலரையும் வாயை பிளக்க வைத்தது.

Comments (0)
Add Comment