நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர்.. சூப்பர் ஓவரில் நடந்த திருப்பம்!! (படங்கள்)

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி சூப்பர் ஓவர் வரை திரில்லாக சென்று முடிந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். யார் சிறந்த அணி என்று இதை விட வேறு எப்படியும் தீர்மானிக்க முடியாது. இந்த தொடரில் நடந்த போட்டிகளிலேயே சிறந்த போட்டி இந்த இறுதிப்போட்டிகத்தான் இருக்க முடியும். ஆம், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இதுவரை எந்த ஒரு போட்டியும் இப்படி இறுதி வரை சென்று திரில்லாக முடிந்து பின் சூப்பர் ஓவர் வரைய நீண்டது இல்லை.

முக்கியமாக கடைசி ஓவரில் ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. இலக்கு இலக்கு இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகவும் நிதானமாக ஆடியது. நியூசிலாந்து அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவர் கடைசி ஓவர் இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி இறங்கி 49 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 227 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இருவரும் களத்தில் இருந்தனர். அந்த கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. அந்த ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. அடுத்து என்ன அடுத்து என்ன அடுத்த பந்திலும் ரன் எதுவும் செல்லவில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பாலே ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார். இந்த போட்டியை மாற்றிய பந்து என்றால் அதற்கு அடுத்த பந்துதான். சரியாக அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க, நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. 6 ரன்கள் 6 ரன்கள் இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது. இதையடுத்து கடைசி இரண்டு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

5வது பந்தில் ரஷீத் ரன் அவுட் ஆனார். ஆனால் 1 ரன் சென்றது. இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த பந்தும் 1 ரன் ஓடிய நிலையில் இங்கிலாந்து இன்னொரு விக்கெட்டை ரன் அவுட் மூலம் இழந்தது.

சூப்பர் ஓவர் இதனால் இங்கிலாந்து 241 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. இதையடுத்து உலகக் கோப்பையில் முதல்முறையாக கடைசி ஓவரில் சூப்பர் ஓவர் போடப்பட்டது. மீண்டும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இறங்கினார்கள். அந்த ஓவரில் வரிசையாக 3 ரன், 1 ரன், பவுண்டரி, 2 ரன், 1 ரன், பவுண்டரி சென்றது.

இதனால் நியூசிலாந்து அணிக்கு இந்த முறை 15 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நியூசிலாந்து என்ன நியூசிலாந்து என்ன இந்த நிலையில் நியூசிலாந்து மீண்டும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். 16 ரன்களை நியூசிலாந்து எடுக்க வேண்டும். குப்தில் மற்றும் நீசம் இருவரும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள்.

அந்த ஓவரின் முதல் பந்து வைட் சென்றது. அதற்கு அடுத்த பந்தில் நீசம் இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்திலேயே சிக்ஸ் சென்று போட்டி மாறியது. கடைசி என்ன கடைசி என்ன அதற்கு அடுத்த இரண்டு பந்தில் இரண்டு இரண்டு ரன்கள் என்று 4 ரன்கள் சென்றது. இதனால் கடைசியில் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை மீண்டும் ஏற்பட்டது.

ஆனால் சரியாக அந்த பந்தில் நியூசிலாந்து 1 ரன் எடுக்க, இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் விழுந்தது. குப்தில் சரியாக அந்த பந்தில் ரன் அவுட் ஆனார். சாம்பியன் சாம்பியன் இதனால் நியூசிலாந்து 15 ரன்கள் எடுக்க சூப்பர் ஓவரும் டை ஆனது. இதையடுத்து விதிப்படி இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. தோனியை ரன் அவுட் செய்து செமி பைனலுக்கு வந்த நியூசிலாந்து அதே ரன் அவுட் மூலம் கோப்பையை இழந்துள்ளது.

Comments (0)
Add Comment