அவருக்கு காலில் விரல்களே இல்லை.. கிண்டல் செய்யாதீர்கள்.. !! (படங்கள்)

நியூசிலாந்து வீரர் குப்திலின் காலில் விரல்கள் இல்லாத விஷயம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதை அடுத்து தற்போது வைரலாகி வருகிறார். உலகக் கோப்பை இறுதிப்போட்டி பல்வேறு பரபரப்புக்கு இடையில் நடந்து முடிந்துள்ளது. நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சூப்பர் ஓவர் வரை இந்த போட்டி நடந்து பின் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 50 ஓவருக்கு 10 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 241 ரன்கள் எடுத்து இருந்தது.

சூப்பர் ஓவர் சூப்பர் ஓவர் இதனால் போட்டி டை ஆனது. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய இறங்கினார்கள். அந்த ஓவரில் வரிசையாக 3 ரன், 1 ரன், பவுண்டரி, 2 ரன், 1 ரன், பவுண்டரி சென்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு இந்த முறை 15 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. என்ன எடுத்தனர் என்ன எடுத்தனர் நியூசிலாந்து மீண்டும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். 16 ரன்களை நியூசிலாந்து எடுக்க வேண்டும். குப்தில் மற்றும் நீசம் இருவரும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள்.

அந்த ஓவரில் வரிசையாக வைட், 1 ரன், 2 ரன், சிக்ஸ், 2 ரன், 2 ரன், 1 ரன் சென்றது. இதனால் நியூசிலாந்து அணி அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் டை ஆனது. எப்படி அவுட் எப்படி அவுட் இதில் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வீரர் குப்தில் அவுட்டானார். இரண்டு ரன்கள் எடுக்க முடியாமல் அவர் அவுட்டானார். இதனால் அவரை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். நியூசிலாந்து அணியின் தோல்விக்கு இவர்தான் காரணம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இந்தியர்கள் கிண்டல் இந்தியர்கள் கிண்டல் அதேபோல் இந்தியர்கள் சிலரும் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இவர்தான் செமி பைனல் போட்டியில் தோனியின் விக்கெட்டை ரன் அவுட் மூலம் எடுத்தது. தற்போது அதேபோல் அவரும் ரன் அவுட் மூலம் கோப்பையை இழந்து இருக்கிறார் என்று பல இந்தியர்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார். ஆனால் ஆதரவு ஆனால் ஆதரவு ஆனால் இவரின் வேகமான ஓட்டத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். குப்திலுக்கு இடது காலில் 2 விரல்கள் மட்டுமே இருக்கிறது.பளு தூக்கும் வாகனம் சிறு வயதில் இவர் மீது மோதியதில் காலில் இருந்த மூன்று விரல்கள் வெட்டப்பட்டது. இதனால் அவர் இத்தனை வருடங்கள் காலில் வெறும் இரண்டு விரலுடன்தான் வாழ்ந்து வருகிறார்.

சூப்பர் பாஸ் அந்த இரண்டு விரல்களுடன்தான் சூப்பர் ஓவரில் அவர் அடுத்தடுத்து 2 முறை 2 ரன்கள் ஓடினார். அவரால் வேகமாக ஓட முடியும். கடைசி பந்தில் தவறவிட்டுவிட்டார். அவரை இப்படி கிண்டல் செய்வது சரியான விஷயம் கிடையாது என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் தற்போது குப்தில் கால் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment