கெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு!!

பிரபல வீரர் கெயில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய ஊடகம் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது வீரர்கள் ஓய்வறையில் பெண் பத்திரிகையாளரிடம், மேற்கிந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகாத முறையில் சைகை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஓய்வறையில் இருந்தபோது செய்தியாளர்கள் யாரும் எனது அறைக்கு வரவில்லை.

என்னுடன் என்னுடைய சக அணி வீரர் டுவெய்ன் ஸ்மித் உடன் இருந்தார் என்று கெயில் மறுத்தார். மேலும், இந்தச் செய்திகள் தனது நற்பெயருக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் எனக் கூறி ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். முடிவில் கெய்லுக்கு ரூ. 1.44 கோடி நஷ்ட ஈடை தர வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், மற்றொரு பக்கம், நஷ்ட ஈட்டு தொகை போதாது என்றும், எனவே அதை உயர்த்தி தர வேண்டும் என்றும் கெயில் அப்பீல் செய்தார். இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், இரண்டையும் தள்ளுபடி செய்தது. யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கெயில் உலகம் முழுவதும் உள்ள டி20 கிரிக்கெட் தொடர்களில் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர்.

எப்போதும் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், 24 மணி நேரமும் ஜாலியான சுபாவம் கொண்டவர். அப்படிப்பட்டவரை இந்த மானநஷ்ட வழக்கு அவரை பாடாய்படுத்தியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக போராடி இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் கெயில்.

Comments (0)
Add Comment