கினிகத்தேனை ஏற்பட்ட சரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!! (படங்கள்)

இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் 18.07.2019 அன்றைய தினம் முதல் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற சரிவு காரணமாக 10 கடை தொகுதிகள் முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது.

இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

19.07.2019 அன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த கே.எம். ஜமால்டீன் வயது 60 என்ற நபர் சடலமாக காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment