ஜனாதிபதி தேர்தலை யாராலும் தடுக்க முடியாது – அதிகாரம் ஜனாதிபதியிடம்!

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்த தீர்மானித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களிடம் இன்று (22) காலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு தௌிவுபடுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

குறித்த காலப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதனை செய்யக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

Comments (0)
Add Comment