மன்னார் URI கிளையின் கூட்டம்!! (படங்கள்)

மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றிணைப்பின் மாதாந்த கூட்டம் இன்று தலைவர் வண. தர்மகுமாரக் குருக்கள் தலமையில் நடைபெற்றது. UNITED RELIGIONS INITIATIVE TO CHILD EDUCATION AND PRESERVATION கிளையின் முதல் காலாண்டுக்கான முன்னேற்ற அறிக்கையும் அடைவுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. மற்றும் எதிர்வரும் மாதம் நடைமுறைப்படுத்தவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதையற்ற பிரதேசங்களை உறுதிப்படுத்தும்வகையில் தடுப்பு விழிப்புணர்வுகளை சமூகவலைத்தளங்களின் மூலம் செயற்படுத்த பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் மரங்கள் நடுதலின் முக்கியத்தும் மற்றும் எதிர்காலத்தில் பசுமைதொடர்பான நடவடிக்கைள் எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment