ஆத்தாடி.. என்னங்க லிஸ்ட் போய்கிட்டே இருக்கு? (படங்கள்)

ஓராண்டு தடைக்குப் பின் டெஸ்ட் அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக இரண்டு சதங்கள் அடித்து பல சாதனைகளை அடித்து நொறுக்கினார். ஆஷஸ் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 398 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல், டிராவும் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. 25 சதங்கள் 25 சதங்கள் முதல் இன்னிங்க்ஸில் 144 ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித், இரண்டாம் இன்னிங்க்ஸில் 142 ரன்கள் குவித்தார்.

இந்த இரண்டு சதங்கள் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். ஆஷஸ் சாதனைகள் ஆஷஸ் சாதனைகள் ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆடிய கடைசி பத்து இன்னிங்க்ஸ்களில் 2 அரைசதம், 5 சதம், ஒரு இரட்டை சதம் என ரன் மழை பொழிந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். கடும் அழுத்தம் நிறைந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எப்படி ரன் குவித்தாரோ அதே போல தொடர்ந்து இப்போதும் ரன் குவித்து சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

அதிவேக 25 சதம் அதிவேக 25 சதம் டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்க்ஸ்களில் 25 சதம் கடந்த ஸ்மித் அதி வேகமாக 25 டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலியை (127 இன்னிங்க்ஸ்) முந்தி இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடத்தில் டான் பிராட்மேன் (68 இன்னிங்க்ஸ்) இருக்கிறார். இரண்டு இன்னிங்க்ஸ் சதம் இரண்டு இன்னிங்க்ஸ் சதம் அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் [பெற்றார் ஸ்டீவ் ஸ்மித். முன்னதாக ஸ்டீவ் வாஹ், மாத்யூ ஹெய்டன் அந்த சாதனையை செய்துள்ளனர். 10 சதம் 10 சதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 சதம் அடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். டான் பிராட்மேனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment