கோலியை தவிச்சு தண்ணி குடிக்க வைத்த ஸ்டீவ் ஸ்மித்! (படங்கள், வீடியோ)

2019 ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆடிய டெஸ்ட் பேட்டிங் தான் இப்போது செம வைரல். இதுவரை விராட் கோலி தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவருக்கு அருகே கூட யாரும் வர முடியாது என கூறி வந்தவர்கள் கூட ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள். கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் கோலி சாதனை மன்னனாக இருந்த நிலையில், மீண்டு வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் அவருக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் ரன் குவித்துள்ளார்.

சிறந்த டெஸ்ட் வீரர் ஓராண்டு தடையில் இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். அப்போது தன் டெஸ்ட் தரவரிசை முதல் இடத்தை விராட் கோலியிடம் இழந்தார். ஸ்மித் இருந்தவரை கோலியை பலரும் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என ஒப்புக் கொள்ளவில்லை. ஒரே டெஸ்ட் போட்டி ஒரே டெஸ்ட் போட்டி ஸ்மித் இல்லாத போது தனிக் காட்டு ராஜாவாக மாறிய கோலி சாதனைகளை குவித்து தெறிக்க விட்டு வந்தார். ஆனால். தான் தடையில் இருந்து மீண்டு வந்து ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே தெறிக்க விட்டுள்ளார் ஸ்மித்.

இரண்டு சதங்கள் இரண்டு சதங்கள் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரியான இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்க்ஸிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். முதல் இன்னிங்க்ஸில் 144 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 142 ரன்களும் அடித்தார். கோலிக்கு செம போட்டி கோலிக்கு செம போட்டி இந்த இரண்டு சதங்கள் மூலம் கோலியின் சில சாதனைகளை முறியடித்துள்ளார்.

குறிப்பாக அதிவேகமாக 25 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் (127 இன்னிங்க்ஸ்) இரண்டாம் இடத்தில் இருந்தார் கோலி. அவரை முந்திய ஸ்டீவ் ஸ்மித் 117 இன்னிங்க்ஸ்களில் 25வது சதம் கடந்தார். இரண்டு இன்னிங்க்ஸ் சதம் இரண்டு இன்னிங்க்ஸ் சதம் மேலும், ஒரே டெஸ்டின் இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்தார் ஸ்டீவ் ஸ்மித். இதற்கு முன் 2014இல் விராட் கோலி இதே சாதனையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்து இருந்தார். அதன் பின், இந்த சாதனையை ஐந்து ஆண்டுகள் கழித்து செய்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

டெஸ்ட் தரவரிசை கோலியின் சாதனைகளை குறி வைத்துள்ள ஸ்டீவ் ஸ்மித், அடுத்து டெஸ்ட் தரவரிசையில் தான் இழந்த முதல் இடத்தையும் கோலியிடம் இருந்து தட்டிப் பறிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விராட் கோலி 922 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் 857 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார்.


Comments (0)
Add Comment