நியுஸிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு..!!!

நியுஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழுவினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த குழுவில் தினேஸ் சந்திமால், லசித் அம்புல்தெனிய மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக கிண்ண டெஸ்ட் போட்டிகளின் தமது முதல் தொடருக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த தொடருக்கான முதல் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 22 பேர்கொண்ட குழுவினை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று (9) முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழுவினை தெரிவுசெய்துள்ளது.

குறித்த குழு விபரம் பின்வருமாறு,

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, ஓசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ

Comments (0)
Add Comment