ஓமந்தை – ஆறுமுகத்தான்புதுக்குளம் தீர்த்தக்கேணி அமைக்கும் பணி!! (படங்கள்)

ஓமந்தை – ஆறுமுகத்தான்புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு

ஓமந்தை – ஆறுமுகத்தான்புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் ஆரம்ப நிகழ்வு வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா அவர்களின் கம்பெரலிய பகுதி 02 திட்டத்தில் 2,00,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ் தீர்த்தக்கேணியின் பணிகள் இடம்பெறவுள்ளன

இவ் ஆரம்ப நிகழ்வில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டார பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் க.கேதீஸ்வரன், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்களேன பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment